×

பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு மதத்தின் பெயரால் மக்களை தவறாக வழிநடத்தும் மோடி

இமாச்சலபிரசேத்தின் உனா மாவட்டத்தில் உள்ள காக்ரெட் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டுக்காக தனது நகைகளை கொடுத்துள்ளார். ஆனால் உங்கள் தாலியை காங்கிரசார் திருடிவிடுவார்கள் என மோடி கூறுகிறார். இதுபோன்ற பேச்சு நாட்டின் பிரதமருக்கு பொருந்தாது. இப்போது மோடி தன்னை கடவுளாக நினைக்கத் தொடங்கி விட்டார்.

மதத்தின் பெயரால் வாக்குகளை பெறலாம் என நினைக்கிறார். எனவே ஆட்சியில் நீடிக்க வேண்டுமென்பதற்காக மக்களை தவறாக வழிநடத்துகிறார். ஆனால் மக்கள் அனைத்தையும் அறிவார்கள். பொதுவாக பாஜ கட்சி மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு எதிரானது. பிரதமர் மோடி மக்களின் விரோதியாக இருக்கிறார். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார். .

 

 

The post பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு மதத்தின் பெயரால் மக்களை தவறாக வழிநடத்தும் மோடி appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Modi ,Congress ,General Secretary ,Kagret ,Una district ,Himachal Pradesh ,Former ,Indira Gandhi ,
× RELATED நீட் போலி விடைத்தாள் மாணவி வீடியோ...