×

மிசோரம் மாநிலத்தின் அய்ஸால் பகுதியில், ரெமல் புயல் காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு!

மிசோரம்: மிசோரம் மாநிலத்தின் அய்ஸால் பகுதியில், ரெமல் புயல் காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் மாயமான நிலையில், கனமழை அங்கு தொடர்வதால் மீட்புப் பணிகளில் தொய்வு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெமல் புயல் காரணமாக மிசோரம் மாநிலத்தில் கடந்த 48 மணி நேரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ரெமல் புயலால் இன்று காலை 6 மணியளவில் தலைநகர் ஐஸ்வால் அருகே மெல்தாம் மற்றும் ஹ்லிமென் எல்லையில் ஒரு கல் குவாரி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐஸ்வால் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பலியானவர்களில் 6 பேர் மிசோரத்தைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் மிசோரம் அல்லாதவர்கள், மற்றவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகள் முழுமையாக அகற்றப்படும் வரை நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இடிபாடுகளில் சிக்கிய நான்கு வயது சிறுவனும், ஆறு வயது சிறுமியும் கற்கள் குவியலை அகற்றி மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுரங்கம் சரிந்ததால் மேலும் அருகில் இருந்த பல வீடுகளும் இடிந்தன.

கனமழை காரணமாக பேரிடர் தளத்தில் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ரெமல் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்திலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரெமல் புயல் காரணமாக பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

The post மிசோரம் மாநிலத்தின் அய்ஸால் பகுதியில், ரெமல் புயல் காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Aizal ,Mizoram ,Remal ,Remel ,Dinakaran ,
× RELATED மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை...