×

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: பட்டியலினப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அடுத்தடுத்து படுகொலை

மத்தியப் பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குபதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பட்டியலினப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு மத்திய பிரதேசம் சாகர் பகுதியில் தலித் பெண்ணை விக்ரம் சிங் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் விக்ரம் சிங் கைது செய்யப்பட்டார்.

வழக்கை வாபஸ் பெற வேண்டும் என விக்ரம் சிங் கும்பல் , பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தாரை அடித்து மிரட்டியதாக சாகர் பகுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதில், 15 வயதான சிறுவன் ஆசாத் தாக்கூர், விஷால் தாக்கூர், புஷ்பேந்திர தாக்குர் மற்றும் சோட்டு ரைக்வார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2020ல் பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற மிரட்டி, பெண்ணின் 18 வயது சகோதரர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய 9 பேர் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மே 25ம் தேதி, வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்குசாட்சி சொல்ல வந்த அப்பெண்னின் உறவினர் அடித்துக் கொல்லப்பட்டார். இதில், குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஆஷிக் குரேஷி, பப்லு பெனா, இஸ்ரேல் பெனா, ஃபஹீம் கான் மற்றும் தந்து குரேஷி ஆகிய 5 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், உயிரிழந்த உறவினரின் உடலை பிரேத பரிசோதனைக்கு ஏற்றி வந்த ஆம்புலன்ஸ், மர்மமான முறையில் விபத்தில் சிக்க, ஆம்புலன்ஸில் இருந்த பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

The post மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: பட்டியலினப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அடுத்தடுத்து படுகொலை appeared first on Dinakaran.

Tags : BJP ,Madhya Pradesh ,Sagar ,
× RELATED பட்டம் பெற்றால் எதுவும் கிடைக்காது...