×

கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரை, பூங்கா செல்வோரை வெளியேற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரை, பூங்கா செல்வோரை வெளியேற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடற்கரை, பூங்காக்கள் செல்லும் மக்களை இரவு 9.30-க்கு மேல் போலீசார் வெளியேற்றுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜலீல் என்பவர் தக்கல் செய்துள்ள மனுவில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமகா உள்ளதால் வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்கள் உளவியல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிக்னல்களில் பசுமை பந்தல் அமைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை இரவு 9.30 மணிக்கு மேல் காவல்தூறையினர் அவர்களை வெளியேற்றுவதாகவும், கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை பின் இரவு வரை அங்கு இருக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தனது மனுவை பரிசீலித்து வெயிலின் தக்கத்தில் இருந்து தப்பிக்க கடற்கரை செல்லும் மக்களை துரத்த கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுகொண்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரை, பூங்கா செல்வோரை வெளியேற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Court ,Tamil Nadu DGP ,Chennai ,Chennai High Court ,
× RELATED செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய...