×

அம்பானி, அதானிக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பியுள்ளார்: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: அம்பானி, அதானிக்களுக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பி வைத்ததாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ஏழைகளுக்கு உதவுவதற்காக அல்ல. மற்றவர்கள் உயிரியல் ரீதியாக படைக்கப்பட்டிருந்தாலும் மோடி அப்படி அல்ல என்று உ.பி.இல் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் மாநாட்டில் அம்பானி, அதானிக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பியுள்ளார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது; “அம்பானி, அதானிக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பியுள்ளார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான மோடியை பரமாத்மா அனுப்பவில்லை.

இந்தியக் கூட்டணியும், அரசியலமைப்புச் சட்டமும் ஒரு பக்கம், அரசியல் சாசனத்தை அழிக்க நினைப்பவர்களின் பிரிவு மறுபுறம். இந்திய கூட்டமைப்பு அரசியலமைப்பை இதயம், உயிர் மற்றும் இரத்தம் மூலம் பாதுகாக்கும், மேலும் இந்த கூட்டணி இடஒதுக்கீட்டின் 50 சதவீத வரம்பை முடிவுக்குக் கொண்டுவரும். இந்தியக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அக்னிபாத திட்டத்தைக் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுவோம்” என கூறினார்.

மேலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தனது அரசாங்கத்தின் செயல்திறன் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் தேசத்தின் சவால்களைச் சமாளிக்க நடைமுறை தீர்வுகளின் அவசியத்தையும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

The post அம்பானி, அதானிக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பியுள்ளார்: ராகுல் காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Ambani ,God ,Rahul Gandhi ,Delhi ,Modi ,Adhanis ,UP ,Uttar Pradesh ,God Modi ,Adani ,
× RELATED அனைத்து முடிவுகளையும் அதானிக்கும்...