×

சென்னை பட்டாபிராம் அருகே வைக்கோல் லாரி தீப்பற்றி எரிந்து விபத்து: மளமளவென பரவிய தீயால் லாரி முற்றிலும் எரிந்து சேதம்

சென்னை: சென்னை புறநகர் பட்டாபிராம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆவடி அருகே பட்டாபிராம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி திடீரென தீ பிடித்து லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. பட்டாபிராம் தண்டரை முழுவதும் விவசாய நிலம் அங்கு நெல் அறுவடை முடிந்து அந்த வைக்கோல்களை ஏற்றி கொண்டு வரும் போது வழியில் உள்ள பின் கம்பம் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது அந்த தீயினால் வைக்கோல் முழுவதுமாக பிடித்தது.

லாரி ஓட்டுநர் திடீரென்று கீழே குதித்து உயிர் தப்பினார். அதன் பின்னர் வைக்கோல் மட்டும் எரியாமல் வெயிலினால் லாரி முழுவதும் எறிந்து. அப்பகுதியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் பூந்தமல்லியிலிருந்தும், ஆவடியில் இருந்தும் தீயணைப்பு துறையினர் சென்று ஏறத்தாழ 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தகைய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை பட்டாபிராம் அருகே வைக்கோல் லாரி தீப்பற்றி எரிந்து விபத்து: மளமளவென பரவிய தீயால் லாரி முற்றிலும் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Pattabiram, Chennai ,CHENNAI ,Pattabiram ,Poontamalli highway ,Aavadi ,Dinakaran ,
× RELATED சென்னை பெரம்பூரில் ரயில்வே கிடங்கில் தீ விபத்து..!!