×

சவூதி சிறையில் இருக்கும் மீனவரை மீட்க வேண்டும்

*ராமநாதபுரம் கலெக்டர் ஆபீசில் மனைவி, குழந்தைகள் மனு

ராமநாதபுரம் : திருவாடனை அருகே முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த சமயகாந்த் மனைவி நந்தினி. இவர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் மனு அளிக்க குழந்தைகளுடன் வந்தார்.அப்போது நந்தினி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவாடனை அருகே முள்ளிமுனை கிராமத்தில் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். எனது கணவர் சமயகாந்த் சவூதி அரேபியாவின் தம்மாம் ஜூபைல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

மாதந்தோறும் குடும்பத்திற்கு பணம் அனுப்பி விடுவார். அடிக்கடி போனிலும் பேசி வருவார். இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி கடைசியாக போனில் பேசினார். அடுத்து போன் செய்யவில்லை. குடும்பத்திற்கு பணமும் அனுப்பவில்லை. இதுகுறித்து எனது கணவருடன் வேலை பார்க்கும் தெரிந்த நபர்களிடம் போனில் விசாரித்த போது அவர் சிறையில் இருப்பதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் மூலமாக விசாரித்த போது போதை பொருள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்கில் சிறையில் இருப்பது தெரியவந்தது. மேலும் சிறையில் இருக்கும் எனது கணவர் சமயகாந்த் என்னிடம் போனில் பேசினார். அப்போது தான் தவறு செய்யவில்லை. எனவே தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மூலம் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டு கொண்டார். எனவே சிறையில் இருக்கும் எனது கணவரை தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு உதவியுடன் மீட்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

The post சவூதி சிறையில் இருக்கும் மீனவரை மீட்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Saudi ,Ramanathapuram ,Manu Ramanathapuram ,Nandini ,Samayakanth ,Mullimuna ,Thiruvadanai ,Collector ,Vishnuchandran ,Thiruvadan ,
× RELATED போக்சோ வழக்கில் ஆஜராகாத தாம்பரம்...