×

எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் உடல் நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். துரை வைகோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வைகோவின் உடல் நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நலம் குறித்து துரை வைகோவிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.

அறுவை சிகிச்சை முடிந்து வைகோ வீடு திரும்பிய பின் அவரை சந்திப்பதாகவும் முதலமைச்சர் கூறியதாக துரை வைகோ பதிவு செய்துள்ளார். முன்னதாக விரைவில் பூரண நலம் பெற்று தலைவர் வைகோ அவர்கள் இல்லம் திரும்புவார். அதன்பிறகு கழகத் தோழர்கள் அவரை சந்திக்கலாம். அதுவரை, நேரில் வருவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. தலைவர் வைகோ அவர்களின் மீது அக்கறையும், அன்பும் கொண்டு நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள், தலைவர் வைகோவின் சுவாச காற்றாக விளங்கும் மறுமலர்ச்சி சொந்தங்கள் அனைவருக்கும் என் நன்றி என்று துரை வைகோ அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

The post எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Vaiko ,Chennai ,M.K.Stalin ,MDMK ,general secretary ,Durai Vaiko ,Madhyamik ,Dinakaran ,
× RELATED கட்டணமின்றி களிமண், வண்டல் மண்...