×

ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’

*எஸ்பி முன்னிலையில் நடந்தது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று கலவரம் தடுப்பு குறித்த ‘மாப் ஆபரேஷன்’ எனும் போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி சந்தீஷ் போலீசார் கலவரத்தின் போது நடக்கும் பிரச்னைகளை எப்படி கையாளுவது, அப்போது எந்த நேரத்தில் எந்தெந்த முறையில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட வேண்டும், வஜ்ரா வாகனத்தில் இருந்து அனைத்து திசைகளிலும் கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீர் பீய்ச்சி அடிப்பான் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், கலவரக்காரர்களை எப்படி கட்டுப்படுத்துவது, கலவரத்தை எப்படி கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவது, அதற்கான யுத்திகள் என்பது குறித்து செயல்முறையுடன் விளக்கினார். தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள், கையெறி புகை குண்டுகளை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து விளக்கினார். இதில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் தங்கமணி, எஸ்ஐ சுரேஷ் கண்ணா மற்றும் எஸ்எஸ்ஐக்கள், போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’ appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,SP Ramanathapuram ,Ramanathapuram district ,SP Sandish police ,
× RELATED போக்சோ வழக்கில் ஆஜராகாத தாம்பரம்...