×

கவியருவியில் தொடர் தடையால் வண்ணத்து பூச்சி பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள்

*இயற்கையை ரசித்து மகிழ்கின்றனர்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு செல்ல தொடர் தடையால் வன செயல் விளக்க மையமான வண்ணத்து பூச்சி பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் சென்று இயற்கையை ரசித்து மகிழ்கின்றனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பெய்யும்போது, ஆழியார் அருகே உள்ள கவியருக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். இதனால், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகமாக குளித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழையும். அதன்பின் அக்டோபர் இறுதியில் இருந்து நவம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை என அடுத்தடுத்து தொடர்ந்து பெய்தது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல மாதமாக பெய்த மழையால், ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில் கடந்த ஜனவரி இரண்டாவது வாரம் வரை தண்ணீர் அதிகமாக ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால், பல மாதமாக சுற்றுலா பயணிகள் வழக்கத்தைவிட அதிகமாக வந்தனர்.

ஆனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால், ஜனவரி இறுதியிலிருந்து கவியருவிக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைய துவங்கியது. அதிலும், பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து கவியருவியின் ஒரு பகுதியில் மட்டும் லேசாக தண்ணீர் கொட்டியது. அருவிக்கு தண்ணீர் வரத்து சொற்ப அளவிலே இருந்ததால், பெரும்பகுதி வெறும் பாறையானது.
இதனால், இங்கு வந்த சுற்றுலா பயணிகள் பலரும் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்ற அவலம் ஏற்பட்டது. கவியருவிக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவு, வறட்சி காரணமாக, பிப்ரவரி முதல் வாரத்தில் கவியருவி தற்காலிகமாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும், ஆழியார் வரும் சுற்றுலா பணிகள் பலரும் கவியருக்கு செல்ல வாகனங்களில் வருகின்றனர். அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக, வனத்துறையினர் திருப்பி அனுப்புகின்றனர். விடுமுறை நாட்களில் ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால், கவியருவிக்கு தடையை அறிந்து, வன சோதனை சாவடியருகே ஆனைமலை புலிகள் காப்பகம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள வன செயல் விளக்க மையமான வனத்துறையின் வண்ணத்து பூச்சி பூங்காவிற்கு சென்று வருகின்றனர்.

வனத்துறை பூங்காவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு, வனத்துறை பற்றிய அறிய தகவல்கள் மற்றும் விலங்குகளின் உருவம், பூங்கா போன்ற வடிவம், உயர்கோபுரம் உள்ளிட்ட பகுதிக்கு சென்று மகிழ்கின்றனர். வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதால், ஆழியார் அணைக்கு செல்லும் பயணிகள் பலரும், வன செயல் விளக்க மையத்துக்கு சென்று மகிழ்ச்சியடைவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கவியருவியில் தொடர் தடையால் வண்ணத்து பூச்சி பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Vananthu Poothi Park ,Kaviaruvi ,Pollachi ,Vananthu Poochi Park ,Western Ghats ,Coimbatore ,
× RELATED கேரளாவிலிருந்து பொள்ளாச்சி...