×

கோயில் திருவிழாவில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தர்ணா போராட்டம்

*கடையநல்லூர் அருகே பரபரப்பு

கடையநல்லூர் : கடையநல்லூர் அருகே தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் சுவாமி ராமகிருஷ்ணர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ராஜசேகர். இவர் தஞ்சாவூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பெரியநாயகம் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

அப்போது அவருக்கும், வேறு சிலருக்கும் இடையே வரிசையில் நிற்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி திரிகூடபுரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக ராஜசேகர் வந்துள்ளார். அப்போது பெரியநாயகம் கோயிலில் வைத்து பிரச்னை செய்த திரிகூடபுரம் பகுதியைச் சேர்ந்த உதயா, பிரகாஷ், மூர்த்தி, கார்த்திக், மதன் குமார், பார்த்திபன், செல்லத்துரை, முத்துப்பாண்டியன் ஆகியோர் சேர்ந்து ராஜ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த ராஜ்குமார் சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரு சிலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி ராஜசேகரின் உறவினர்கள் நேற்று திரிகூடபுரம் கருப்பசாமி கோயில் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post கோயில் திருவிழாவில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : festival ,Kadayanallur ,Periyaswamy ,Trikutapuram Swami Ramakrishnar Street ,Rajasekhar ,dharna ,Dinakaran ,
× RELATED கடையநல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை ரத்து