×

சென்னையில் குருவியாக செயல்பட்ட நபருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு: குஜராத்தில் கைதானவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தகவல்

அகமதாபாத்: கடந்த மே 20-ம் தேதி இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்புடைய 4 பேரை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சைபர் கிரைம் நிபுணர்கள் ஆய்வு செய்ததில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பல்வேறு இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் குஜராத உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், மேலும் இவர்கள் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து இவர்கள் சென்னை வழியாக அகமதாபாத் சென்றுள்ளதால் சென்னையில் யாரிடமும் தொடர்புள்ளதா என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்றது. குறிப்பாக குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட 4 நபர்களிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இதில் முகமது நசரத் என்பவர் சென்னையில் குருவியாக செயல்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர் இலங்கையில் தடைசெய்யப்பட்ட தேசிய சவுரி ஜமாத் உடன் தொடர்பில் இருப்பதும் அதன் மூலமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடிக்கடி இந்த முகமது நசரத் என்பவர் சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை விரிவுபடுத்த செயல்பட்டாரா என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. இவர் சென்னையில் இருந்து சென்றுள்ளதால் சென்னையிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னையில் குருவியாக செயல்பட்ட நபருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு: குஜராத்தில் கைதானவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,ISIS ,Gujarat ,AHMEDABAD ,Gujarat Anti-Terrorist Unit ,Sri Lanka ,
× RELATED தீ விபத்து நடந்த பள்ளி மூடல் குஜராத் அரசு நடவடிக்கை