×

கேரள மாநிலம் திருச்சூரில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்ட பெண் உயிரிழப்பு: மேலும் 187 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்ட பெண் உயிரிழந்தார். திருச்சூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நுசைபா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சூர் மூனுபீடிகாவில் உணவகம் ஒன்றில் மயோனைஸ் உடன் குழிமந்தியை சாப்பிட்ட 85 பேருக்கு உடல்நலம் பாதிப்புக்கப்பட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 187 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூணுபீடிகையில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிட்ட ஏராளமானோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டது. இதுகுறித்து, ஆய்வு நடத்திய அதிகாரிகள் ஹோட்டலில் பரிமாறப்பட்ட மயோனைஸே, இதற்கு காரணம் என கண்டறிந்தனர். இதனையடுத்து, அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக உணவக நிர்வாகத்திடம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரள மாநிலம் திருச்சூரில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்ட பெண் உயிரிழப்பு: மேலும் 187 பேர் மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thrissur ,Thrissur, Kerala ,Nusaiba ,Thrissur Moonupedika ,
× RELATED வியாபாரிக்கு கத்திக்குத்து: 2 பேர் மீது வழக்கு