×

சீர்காழியில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்

மயிலாடுதுறை: சீர்காழியில் வெறிநாய் ஒன்று 4 பேரை கடித்துக் குதறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பூக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அகோரம் என்பவரை வெறிநாய் கடித்துள்ளது. சீர்காழியில் வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை வெறிநாய் கடித்தது. சீர்காழி பங்களா தோப்பில் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த பிரசன்னாவை வெறிநாய் கடித்தது. சீர்காழி நகராட்சியில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சீர்காழியில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Sirkhazi ,Mayiladuthurai ,Sirkazhi ,Akhoram ,Sirkhazi.… ,
× RELATED சீர்காழியில் இரவில் கொட்டி தீர்த்த மழை