×

(வேலூர்) 450 கிலோ வெல்லம் பதுக்கிய 2 பேர் கைது பேரணாம்பட்டில் போலீஸ் அதிரடி சாராய வியாபாரிகளுக்கு விற்க

 

பேரணாம்பட்டு, மே 27: பேரணாம்பட்டில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்திய போலீசார் வெல்லம் பதுக்கிய 2 பேரை கைது செய்தனர். பேரணாம்பட்டு பஜார் வீதியில் உள்ள சில மளிகை கடைகளில் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு விற்பனை செய்ய சட்ட விரோதமாக வெல்லம் பதுக்கி வைத்திருப்பதாக வேலூர் எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் தனிப்படை மற்றும் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையிலா போலீசார் நேற்று பஜார் வீதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது, பழனி(58) என்பவரது கடையில் 11 மூட்டைகளும், அர்ஷாத்(40) என்பவரது கடையில் 7 மூட்டைகளும் என மொத்தம் 450 கிலோ வெல்லம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த வெல்லம் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து பேராணம்பட்டு போலீசார் வழக்கு பதிந்து பழனி, அர்ஷாத் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

The post (வேலூர்) 450 கிலோ வெல்லம் பதுக்கிய 2 பேர் கைது பேரணாம்பட்டில் போலீஸ் அதிரடி சாராய வியாபாரிகளுக்கு விற்க appeared first on Dinakaran.

Tags : Vellore ,Peranambat ,Peranambatu ,Peranampat Bazar Road ,Peranampat ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!