×

களக்காட்டில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது

 

களக்காடு,மே 28: களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். களக்காட்டில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது இக்கோயிலில் கண்ணன் என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் கண்ணன் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலையில் கோயிலுக்கு வந்து பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.1500 திருடப்பட்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கோயில் நிர்வாக அதிகாரி மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து மாரியப்பன் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உண்டியலை உடைத்து பணம் திருடியது களக்காடு நடுத்தெருவை சேர்ந்த முத்து மாரியப்பன் (29) என்பது தெரிய வந்தது இதையடுத்து போலீசார், முத்து மாரியப்பனை கைது செய்தனர்.

 

The post களக்காட்டில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kalakkad ,Kalakadu ,Varadaraja ,Perumal ,Temple ,Varadaraja Perumal temple ,Kannan ,
× RELATED 17 வயது கல்லூரி மாணவனை கட்டாயப்படுத்தி...