×

சங்கரன்கோவில் அருகே பைக்கில் தவறி விழுந்து பெண் பலி

 

சங்கரன்கோவில்,மே 28: கரிவலம்வந்தநல்லூர் அருகே செந்தட்டியாபுரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி முருகன். இவரது மனைவி பிரியா (34). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை பிரியாவின் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்கு புதூர் கிராமத்திற்கு பிரியா, அவரது கணவர் ஜோதி முருகன் மற்றும் 2 குழந்தைகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். வடக்கு புதூர் கிராமம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து பிரியா தவறி விழுந்து காயமடைந்தார்.

இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சங்கரன்கோவில் அருகே பைக்கில் தவறி விழுந்து பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Sankarankoil ,Jyoti Murugan ,Sentathiapuram Puthur ,Karivalamvanthanallur ,Priya ,
× RELATED பெண் தொடர்பு காரணமாக போலீஸ்காரர் கொலை: விசாரணையில் திடுக் தகவல்