×

தனியார் ஹெச்.எம்களுக்கு ஆலோசனை கூட்டம்

 

நாமக்கல், மே 28: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்பான எல்கேஜி அல்லது முதல் வகுப்புகளில் குழந்தைகளுக்கு சேர்க்கை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், மொத்தம் 1,974 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு மொத்தம் 2,670 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். இதனால் குலுக்கல் மூலம் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக, தனியார் பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் (பொ) மரகதம் (தனியார் பள்ளிகள்) தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் விஜயன், பாலசுப்ரமணியம், உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு போட்டி இருப்பதால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் போது, எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post தனியார் ஹெச்.எம்களுக்கு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்த வழிமுறை