×

சிவகங்கை ஜிஹெச்சில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சிவகங்கை, மே 28: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணி மற்றும் செக்யூரிட்டி பணியில் 340 பேர் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2019 முதல் பணியாற்றி வரும் இந்த ஊழியர்களுக்கு ஊதியமாக மாதம்தோறும் ரூ.11,500 வழங்கப்படுகிறது. அனைவரும், ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வாக குறிப்பிட்ட தொகையும், தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் சேரும் தொகையையும் பெற்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்கப்படாததை கண்டித்து நேற்று காலை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் குமாரவேலு, நிலைய உதவி மருத்துவர் தென்றல்,ம் தனியார் நிறுவனத்தின் மண்டல மேலாளர் முருகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் பணிக்கு திரும்பினர்.

The post சிவகங்கை ஜிஹெச்சில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai GH ,Sivagangai ,Sivagangai Government Medical College Hospital ,Dinakaran ,
× RELATED கொலை வழக்கில் கைதான நான்கு பேருக்கு குண்டாஸ்