×

செங்கல்பட்டு புறவழிசாலையில் கார் மீது லாரி மோதி விபத்து

 

செங்கல்பட்டு, மே 28: சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் (27) மற்றும் அவரது உறவினர்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் திருவண்ணாமலையில் காதணி விழாவை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ளனர். அப்போது நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி செங்கல்பட்டு புறவழிச்சாலை, பச்சையம்மன் கோயில் பகுதியில் வந்துகொண்டிருந்தது.

அந்த லாரி சிதம்பரம் குடும்பத்தினர் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரமாக உள்ள தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கார் நின்றது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் காயமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் ரோந்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி மற்றும் விபத்துக்குள்ளான காரை காவல் நிலையம் அழைத்துச் சென்று லாரி உரிமையாளர் ஜெயக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செங்கல்பட்டு புறவழிசாலையில் கார் மீது லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chidambaram ,Nilangarai ,Chennai ,Kathani ,Tiruvannamalai ,Namakkal district ,Dinakaran ,
× RELATED மதுபோதை தகராறில் நண்பனை வெட்டி...