×

காதலியின் இறுதி சடங்கிற்கு பணமில்லை சடலத்தை சாக்கில் கட்டி சாலையில் வீசிய நபரிடம் போலீஸ் விசாரணை

இந்தோர்: மத்திய பிரதேசம் மாநிலம் இந்தோர் சந்தன் நகர் பகுதிக்குட்பட்ட சாலையில் கயிறால் கட்டப்பட்ட நிலையில் சாக்கு பை ஒன்று அநாதையாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சாக்கு பையை மீட்டு திறந்து பார்த்தனர். அதில் மூதாட்டியின் சடலம் கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணை செய்ததில் சடலமாக மீட்கப்பட்ட 58 வயது மூதாட்டியும், 53 வயது நபரும் கடந்த 10 ஆண்டுகளாக லிவிங் டு கெதர் உறவில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ராஜ்மொகல்லாவைச் சேர்ந்த அந்த நபரிடம் விசாரணை செய்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் உதவி கமிஷனர் நந்தினி சர்மா கூறுகையில்,‘‘நபரின் காதலி 3 நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இறுதி சடங்கு செய்ய அவரிடம் பணம் இல்லாததால் 3 நாட்களாக சடலத்துடனே இருந்துள்ளார்.

இதனிடையே வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் நபரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே காதலியின் சடலத்தை சாக்குபையில் கட்டி வெளியே கொண்டு சென்றுள்ளார். சாக்கு பை கனமாக இருந்ததால் அவரால் இழுக்க முடியவில்லை. அதனால் சாலையிலேயே சாக்கு பையை போட்டுவிட்டு ஓடி விட்டார். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.’’ என்று நந்தினி கூறினார்.

The post காதலியின் இறுதி சடங்கிற்கு பணமில்லை சடலத்தை சாக்கில் கட்டி சாலையில் வீசிய நபரிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Indore ,Indore Chandan Nagar ,Madhya Pradesh ,
× RELATED முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பாஜவில் இணைந்தார்