×

மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜ அனுமதிக்காது ; ஜே.பி.நட்டா பிரசாரம்

வாரணாசி: பிரதமர் மோடி மற்றும் பாஜ கட்சி ஆட்சியில் இருக்கும் வரை மத அடிப்படையில் இடஒதுக்கீடு அனுமதிக்கப்படாது என்று பாஜ தலைவர் ஜேபி நட்டா தெரிவித்தார். உபி மாநிலம் வாரணாசியில் நேற்று ஜே.பி.நட்டா கூறுகையில்,‘‘ மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என அரசியல் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் பாஜ கட்சி ஆட்சியில் இருக்கும் வரை அது போன்ற இடஒதுக்கீடுகள் வழங்கப்படாது. தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களின் இடஒதுக்கீட்டை வேறு யாரும் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்.நீண்ட காலமாக அரசியல் என்பது பிரித்து ஆளும் கொள்கை அடிப்படையில் இருந்தது.

இப்போது தான் வளர்ச்சியின் அடிப்படையில் அரசியல் நடக்கிறது.10 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் ஊழல் மிகுந்த நாடுகளுடன் இந்தியா கணக்கிடப்பட்டு வந்தது. சாதாரண நபர்களின் அரசியல் அறியாமையால் இந்த நிலை ஏற்பட்டது. ஜனநாயகத்துக்கு மிக பெரிய ஆபத்தாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி பற்றி மக்கள் மத்தியில் மோடி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். மு தற்போது வளர்ச்சி அடிப்படையிலான அரசியல் நடக்கிறது’’ என்றார்.

The post மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜ அனுமதிக்காது ; ஜே.பி.நட்டா பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : BAJA ,JP Natta ,Varanasi ,BJP ,Modi ,Varanasi, UP ,Dinakaran ,
× RELATED 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் தேசம் வலிமை பெற்றுள்ளது: ஜே.பி.நட்டா