×

ராகுல் வழக்கு 7ல் விசாரணை

சுல்தான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக பாஜவை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பெங்களூருவில் பேட்டியின்போது ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த டிசம்பரில் ஆஜரான ராகுல்காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுலின் வழக்கறிஞர்கள் அவர் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருப்பதாகவும் ஆஜராவதற்கு அவகாசம் தேவை என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து ஜூன் 7ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post ராகுல் வழக்கு 7ல் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rahul ,Sultanpur ,Uttar Pradesh ,BJP ,Vijay Mishra ,Congress ,President ,Rahul Gandhi ,Union Minister ,Amit Shah ,Bengaluru ,
× RELATED கொரோனா விதிமுறை மீறல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சரண்