×

2வது ராணுவ உளவு செயற்கைகோள் விரைவில் ஏவ வடகொரியா திட்டம்

சியோல்: தென்கொரியா, ஜப்பான் மற்றும் சீனாவின் முத்தரப்பு உச்சிமாநாடு நேற்று நடைபெற்றது. முன்னதாக வடகொரியா அடுத்த வாரம் செயற்கைகோள் ராக்கெட் ஏவுதற்காக திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஜப்பான் கடலோர காவல்படை அறிக்கையில், மே 27 முதல் ஜூன் 4ம் தேதி நள்ளிரவுக்குள் கொரிய தீபகற்பம் மற்றும் சீனாவிற்கு இடையே பிலிப்பைன்ஸ் தீவான லூசானுக்கு கிழக்கே கடல் பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயற்கைகோள் ராக்கெட் ஒன்றை ஏவவுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கைகோளை ஏவ வேண்டாம் என்று வடகொரியாவிடம் வலியுறுத்தும் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் இதர நாடுகளின் கோரிக்கைக்கு ஒத்துழைக்குமாறு அதிகாரிகளுக்கு ஜப்பான் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இரண்டாவது செயற்கைகோள் திட்டமானது வடகொரியாவின் ராணுவ உளவு நடவடிக்கையாக கருதப்படுகின்றது.

The post 2வது ராணுவ உளவு செயற்கைகோள் விரைவில் ஏவ வடகொரியா திட்டம் appeared first on Dinakaran.

Tags : North Korea ,Seoul ,South Korea ,Japan ,China ,Japan Coast Guard ,Dinakaran ,
× RELATED வட கொரியாவுக்கு எதிராக எல்லையில்...