×

மைசூருவில் பிரதமர் தங்கியிருந்த ஓட்டல் பில் பாக்கி ரூ.80 லட்சத்தை மாநில அரசே செலுத்தும்: வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே உறுதி

பெங்களூரு: பந்திப்புரா புலிகள் திட்டம் 50 ஆண்டு நிரம்பியதை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மைசூரு வந்த பிரதமர் தங்கிய ஓட்டலின் பில் பாக்கியை மாநில அரசே செலுத்தும் என வனத்துறை அமைச்சர் ஈஸ்வர்கண்ட்ரே தெரிவித்தார். புலிகள் திட்டத்தின் 50வது ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார்.

அப்போது, அவர் மைசூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். இதற்கிடையில், அந்த ஓட்டலின் பில் பாக்கி ரூ.80 லட்சத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டல் நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே பேசுகையில், ‘பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோர் வரும் போது அவர்களை வரவேற்பது மாநில அரசின் வழக்கம்.

ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாநில சட்டப்பேரவை தேர்தலின் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தது. இதனால், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் மாநில அரசு பங்கெடுக்கவில்லை. இதனால், ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்கவே மாநில அரசு ஓட்டலின் பாக்கி பில்லை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது’ என்றார்.

The post மைசூருவில் பிரதமர் தங்கியிருந்த ஓட்டல் பில் பாக்கி ரூ.80 லட்சத்தை மாநில அரசே செலுத்தும்: வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே உறுதி appeared first on Dinakaran.

Tags : state government ,Mysuru ,Forest Minister ,Ishwar Kantre ,BENGALURU ,government ,Bandipura ,Project ,Dinakaran ,
× RELATED கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது