×

ரொக்கப் பரிசு விருதுகள்

* ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு ரூ.20கோடியும், 2வது இடம் பிடித்த ஐதராபாத் அணிக்கு ரூ.12.5 கோடியும் வழங்கப்பட்டது.

* 3வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ரூ.7 கோடி, 4வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.6.5 கோடி பரிசளிக்கப்பட்டது. அதிக ரன் குவித்து ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்திய விராத் கோஹ்லி (பெங்களூர்), விக்கெட் வேட்டையில் அசத்திய ஹர்ஷல் படேலுக்கு (பஞ்சாப்) தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

* தொடரின் சிறந்த வளரும் வீரராக தேர்வான நிதிஷ்குமார் ரெட்டி (ஐதராபாத்) ரூ.20 லட்சம், தொடரின் சிறந்த வீரர் சுனில் நரைன் (கொல்கத்தா) ரூ.12 லட்சம் பெற்றனர். அல்டிமேட் ஃபேன்டசி வீரராக சுனில் நரைன் (கொல்கத்தா), அதிக பவுண்டரி விளாசிய டிராவிஸ் ஹெட் (ஐதராபாத்), அதிக சிக்சர் அடித்த அபிஷேக் சர்மா (ஐதராபாத்), அதிக கேட்ச் பிடித்த ரமன்தீப் சிங் (கொல்கத்தா), நேர்மையான ஆட்டத்துக்காக ஐதராபாத் அணி, சிறந்த விளையாட்டு களத்துக்காக ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டன.

The post ரொக்கப் பரிசு விருதுகள் appeared first on Dinakaran.

Tags : IPL ,Kolkata ,Hyderabad ,Rajasthan ,Bengaluru ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் நீட் தகுதி பட்டியலில்...