×

கொளத்தூர் ஊராட்சியில் சாலையோரம் குவிந்திருந்த குப்பைகள் அகற்றம்

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் படவேடு சாலையில் கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர், முல்லை நகர், கேஎம்ஏ நகர் உள்ளது. இங்கு சாலையோரம் பிளாஸ்டிக் கவர்கள், குப்பைகள், கழிவு பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. எந்நேரமும் நாய்கள் குப்பைகளை கிளறி கொண்டிருப்பதால் தொடர்ந்து துர்நாற்றம் வீசிக்கொணடிருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை நிலவுகிறது. மேலும், மழை காலங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.  இதனால் அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கெனவே கொரோனா வைரஸ், ஓமைக்ரான் வைரஸ் என மக்கள் பீதியில் உள்ள நிலையில் இதுபோன்ற குப்பைகளால் நோய் தொற்று பரவும் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே, சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி கிருமிநாசினி ெதளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்த விரிவான செய்தி நேற்று முன்தினம் தினகரனில் வெளியானது. செய்தி வெளியான சில மணிநேரத்தில் குப்பைகள் அகற்றி கிருமிநாசினி பவுடர் தூவப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர். …

The post கொளத்தூர் ஊராட்சியில் சாலையோரம் குவிந்திருந்த குப்பைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Kolathur panchayat ,Kannamangalam ,Bharati Nagar ,Mullai Nagar ,KMA Nagar ,Kannamangalam Patavedu road ,
× RELATED குடியிருப்பு பகுதியில் தாழ்வாக...