×

தோள்பட்டை எலும்பு முறிவு மருத்துவமனையில் வைகோ அனுமதி

சென்னை: தோள்பட்டையில் எலும்பு முறிவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதிமுக குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 25ம் தேதி வைகோ நெல்லை சென்றார்.

பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டுகிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

 

The post தோள்பட்டை எலும்பு முறிவு மருத்துவமனையில் வைகோ அனுமதி appeared first on Dinakaran.

Tags : VAICO ,Hospital ,CHENNAI ,Madhyamik General Secretary ,Vigo Apollo ,Vaiko ,Nellie ,Madhya ,Pradesh ,Kumari District ,Vetrivel ,Ravichandran ,Perumalpuram… ,VACO ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு!