×

அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற அடிப்படையில், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் என்று இருக்கின்ற நிலையில், இனிமேல் நிலத்தை கண்டுபிடித்து, கையகப்படுத்தி, விண்ணப்பிப்பது என்பது இயலாத காரியம். ஏழை, எளிய மாணவ, மாணவியர் அதிகளவில் மருத்துவராக வேண்டுமானால், அதற்கு ஒரே வழி அதிகளவில் அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். எனவே, அரசு மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க ஓபிஎஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : OPS ,CHENNAI ,O. Panneer Selvam ,DMK government ,Perambalur ,Mayiladuthurai ,Tirupattur ,Ranipettai ,Kanchipuram ,Tenkasi ,
× RELATED பிரிந்து இருப்பவர்கள்...