×

பிளஸ் 2 மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம்

சென்னை: பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் கேட்டு விண்ணப்பித்தவர்கள் இன்று மதியம் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விரும்புவோர் 29ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: பிளஸ் 2 தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ மாணவியர் தங்கள் விடைத்தாள் நகல்களை இன்று மதியம் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்2 அல்லது மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணைய தளத்தில் வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 29ம் தேதி மதியம் 1 மணி முதல் ஜூன் 1ம் தேதி மாலை 5 மணி வரை அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தென்காசி, ராணிப் பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறு கூட்டல் 2 அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை ஒப்படைத்து அதற்கான கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும். மறு மதிப்பீட்டுக்கு பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ505, மறு கூட்டல் செய்ய உயிரியல் பாடம் மட்டும் ரூ305, பிற பாடங்கள்(ஒவ்வொன்றுக்கும்) ரூ205 செலுத்த வேண்டும்.

 

The post பிளஸ் 2 மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Department of Examinations ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...