×

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை

சென்னை: தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் மூலம் செயல் பட்டு வருகிறது. இந்தக் கல்வி நிறுவனம் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது.

இத்தகைய சூழலில் அரசு வேலை வாய்ப்புகளில் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் அளிக்கும் சான்று செல்லாது எனத் தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி அரசாணையை வெளியிட்டது.

இதனை எதிர்த்து திருவள்ளூரைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரனைக்கு வந்தது. இதற்கான விசாரணை இன்று நடைபெற்றது. இதனையடுத்து நீதிபதி தமிழக அரசின் இந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது உத்தரவிட்டார்.

The post தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை appeared first on Dinakaran.

Tags : National Open School Institute ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu ,Ministry of Education of the Federal State ,Dinakaran ,
× RELATED செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய...