×

பாடாலூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து செவிலியர் பலி

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் எறைய சமுத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி மகன் மணிகண்டன் (23). திருச்சி மாவட்டம் மணப்பாறை கரிக்கான் குளத்தெருவை சேர்ந்த முருகானந்தம் மகள் பிரியதர்ஷினி(23). இவர் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். மணிகண்டனும் அதே மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் நேற்று திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு இருவரும் பைக்கில் வந்தனர். பாடாலூர் அருகே உள்ள பெருமாள் மலை எதிரே கட்டுப்பாட்டை இழந்து பைக் கீழே விழுந்தது. இதில் பின்னால் அமர்ந்து வந்த பிரியதர்ஷினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியதர்ஷினி இன்று உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாடாலூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து செவிலியர் பலி appeared first on Dinakaran.

Tags : Padalur Padalur ,Ravi Makan Manikandan ,Eraya ,Samudram Mariamman Kovil Street, Perambalur District ,Priyadarshini ,Murukanandam ,Karikkan Kulatheru ,Manaparai, Trichy district ,Perambalur.… ,Padalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் புகழாரம்...