×

அத்தியூர், சேக்கனூர் ஊராட்சிகளில் சமுதாய சுகாதார வளாகம் திறப்பு பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதுஉடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்-அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

அணைக்கட்டு :  அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர், சேக்கனூர் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 15வது நிதிக்குழு மானியம் மற்றும் ₹10.50 லட்சத்தில் சமுதாய சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.  ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகேஸ்வரி காசி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாலதி சுரேஷ், அண்ணாமலை, பிடிஓ ராஜன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்டிஓ விஷ்ணுபிரியா, தாசில்தார் பழனி உள்பட வருவாய் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.  இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு கட்டிமுடிக்கபட்ட இரண்டு புதிய சுகாதார வளாகங்களை திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த சின்னசேக்கனூர் கிராம மக்கள் நூறு நாள் வேலை, வீட்டு மனை பட்டா, விளையாட்டு மைதானம், முதியோர், மாற்றுத்திறனாளி உதவி தொகை உள்ளிட்டவை கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து அந்த கிராமத்தில் பழுதடைந்திருக்கும் சுகாதார வளாகத்தை இடிக்கவும், சாலையை கடந்து தண்ணீர் செல்ல பெரிய பைப் லைன் அமைக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும், அத்தியூர் ஊராட்சி கலங்கமேடு அருகே மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தில் நடந்து வரும் பண்ணை குட்டை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், குட்டை அமைக்கப்பட்டு வரும் இடத்திற்கு கார் செல்ல வசதியில்லாததால், கலெக்டர் அலுவலர்களுடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்கு வெட்டப்பட்டிருந்த குட்டையில் இறங்கி ஆய்வு செய்தார்.  இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், உதவி தொகை, பட்டா உள்பட பொதுமக்களின் அனைத்து மனுக்கள் மீதும் அலுவலர்கள் உனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆய்வு செய்துள்ள கிராமங்களில் பொதுமக்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார். அப்போது ஒன்றிய கவுன்சிலர்கள் ஜீவாசேட்டு, அத்தியூர் ஊராட்சி துணை தலைவர் ஜெயசங்கர், வருவாய் ஆய்வாளர் பூங்கோதை, உதவி பொறியாளர் ஜெயந்தி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சுப்பிரமணி, ஊராட்சி செயலாளர்கள் பெருமாள், பாஸ்கரன் மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறையினர் கலந்து கொண்டனர். விஏஓ சஸ்பெண்ட் ஊசூர் அடுத்த சின்னசேக்கனூர் கிராமத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, சில மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, ஸ்கூட்டர் வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர் உடனடியாக விஏஓவை அழைத்து மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர், அதில் உதவி தொகை பெறுபவர்கள் எத்தனை பேர் என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டார். அதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. பின்னர், கலெக்டர் தொடர்ந்து அவரிடம் கிராமத்தின் விவரங்களை கேட்டதற்கு பதிலளிக்காததால், ஆத்திரமடைந்த கலெக்டர், விஏஓவை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய ஆர்டிஓவுக்கு உத்தரவிட்டார்.உடனடி உதவி தொகைக்கான ஆணை அத்தியூர் ஊராட்சியில் பண்ணை குட்டை வெட்டும் பணியை ஆய்வு செய்து கொண்டிருந்த கலெக்டரிடம், கணவரால் கைவிடப்பட்ட பரிமளா என்பவர், உதவி தொகை வழங்காமல் அலைக்கழிப்பதாக கண்ணீர் விட்டு அழுதபடி கூறினார். தொடர்ந்து அங்கிருந்த அமுலு மற்றும் முதியவர் முனுசாமி ஆகியோர் உதவி தொகை வழங்க கேட்டனர். இதையடுத்து கலெக்டர் அங்கிருந்த விஏஓ சங்கர்தயாளனை அழைத்து அவர்களுக்கு உதவி தொகை வழங்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கேட்டார். அதற்கு விஏஓ எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்தார். பின்னர், கலெக்டர் பெண் உட்பட மூவருக்கு உடனடியாக உதவி தொகைக்கான ஆணைகள் வழங்கிவிட்டு எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என விஏஓவிடம் கூறினார்….

The post அத்தியூர், சேக்கனூர் ஊராட்சிகளில் சமுதாய சுகாதார வளாகம் திறப்பு பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதுஉடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்-அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Athiyur ,Sekanur ,Rural Development Department ,Athiyur, ,Sekanur Padrams ,Thaluka Usur ,Panchayam ,Dinakaran ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!