×

லியோ படத்தில் மேலும் ஒரு மலையாள நடிகர்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம்லியோ. மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கிறார். இந்த ஜோடி 13 வருடங்களுக்கு பின் தற்போது தான் படத்தில் இணைந்துள்ளது. மேலும் சஞ்சய், மிஸ்கின், கவுதம் மேனன், அர்ஜுன், கதிர், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நட்சத்திரங்களே இத்தனை பேர் இருக்க, அறிவிக்கப்படாத சிலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என தகவல் வெளிவந்தது.

சமீபகாலமாக தனுஷ் ஒரு முக்கிய கேமியோ ரோலில் நடிக்கிறார், அவருடை காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. இந்நிலையில், மலையாளத்தில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஜோஜோ ஜார்ஜ் கூட இப்படத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் வெளிவந்த ஜகமே தந்திரம் படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் லியோ படத்தில் தற்போது மேலும் ஒரு நட்சத்திரம் இணைந்துள்ளார்.

The post லியோ படத்தில் மேலும் ஒரு மலையாள நடிகர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Leo ,Vijay ,Lokesh Kanagaraj ,Trisha ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிம்மம்