×

சேலத்தில் நமக்கு நாமே திட்டம், நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சேலம்: சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், “நமக்கு நாமே திட்டம்” மற்றும் “நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்” ஆகிய புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.38.53 கோடி மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.54.01 கோடி மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 30,837 பயனாளிகளுக்கு ரூ.168.64 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.தொடங்கி வைக்கப்பட்ட புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்நமக்கு நாமே திட்டம்மக்களின் சுய உதவி, சுயசார்பு எண்ணம் ஆகியவற்றை வலிமைப்படுத்தவும், பரவலாக்கவும், மக்கள் பங்கேற்புடன் கூடிய நமக்கு நாமே திட்டத்தினை முத்தமிழறிஞர் கலைஞர் 1997-98-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி பொதுச் சொத்துக்களை உருவாக்கி பராமரித்து வருவதே நமக்கு நாமே திட்டத்தின் நோக்கமாகும்.மேலும், இத்திட்டம் வளர்ச்சி பணிகளுக்கான திட்டமிடுதல் தொடங்கி, வள ஆதாரங்களை திரட்டுதல், பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் மேற்பார்வை செய்தல் என அனைத்திலும் மக்களை நேரடியாக ஈடுபடுத்துகிறது. மாநில அளவில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் மதிப்பீட்டில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பு நிதி மற்றும் அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம்நகர்ப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாநில அளவில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நகர்ப்புறங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதாகும். இயற்கை வள மேலாண்மைப் பணிகள், வெள்ளத் தடுப்புப் பணிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், நகர்ப்புற இடத்தை பசுமைப்படுத்துதல் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், சமூக மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் வாழ்வாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்துதல், திறனுக்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொதுச் சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், பசுமை மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு இயற்கை வள மேலாண்மை தொடர்பான பணிகளை மேற்கொள்வது ஆகும்….

The post சேலத்தில் நமக்கு நாமே திட்டம், நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Saleam ,Chief Minister of State ,G.K. Stalin ,Salem ,CM ,B.C. ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...