×

ஆந்திராவில் இருவேறு விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்: போலீசார் விசாரணை

நெல்லூர்: ஆந்திராவில் நடந்த இருவேறு விபத்துகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திண்டுக்கல் திரும்பிய போது கிருஷ்ணா மாவட்டம் பாபுலபாடு மண்டலம் கொடுருபாடு என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த சுவாமிநாதன்(40), ராஜேஷ் (12), ராதாபிரியா (14), கோபி (23), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சாமிநாதன் மனைவி சத்யா படுகாயம் அடைந்துள்ளார். இதேபோல நெல்லூர் மாவட்டத்தில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சென்று திரும்பிய கார் விபத்துக்குள்ளானது. திருப்பதியில் இருந்து வரும் வழியில் காணிப்பாக்கம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது. சித்தூர்-நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்துகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திராவில் இருவேறு விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Andhra ,Nellore ,Tamil Nadu ,Andhra Pradesh ,Swaminathan ,Dindigul district ,East Godavari, AP ,
× RELATED ஆந்திர மாநிலம் நெல்லூரில் பள்ளிவேன் மீது லாரி மோதியதில் 15 பேர் படுகாயம்..!!