×

டிரோன் கேமரா மூலம் நிலத்தை அளந்து சான்றிதழ் வழங்கும் பணி-கலெக்டர் துவக்கி வைத்தார்

திருக்கனூர் :   திருக்கனூர் அருகே உள்ள மணலிப்பட்டில் புதுச்சேரி அரசு நில அளவை பதிவேடுகள் துறை சார்பில் ஸ்வாமித்வா திட்டம் மூலம் மத்திய நில அளவைத்துறை கண்காணிப்பில் நிலத்தினை டிரோன் கேமரா மூலம் அடையாளம் கண்டு அந்த நிலத்திற்கான இடத்தை அளந்து நில உரிமையாளர்களிடம் நில உரிமை சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது. இப்பணியினை  கலெக்டர் பூர்வா கார்க், சப்-கலெக்டர் ரிஷிதா குப்தா  ஆகியோர்  நேற்று துவக்கி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக ஆய்வை மேற்கொண்டனர். அப்போது நில அளவை பதிவேடுகள் துறை இயக்குநர் ரமேஷ், தாசில்தார்கள் கார்த்திகேயன், மணிகண்டன், சந்தோஷ்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், நில அளவையாளர்கள், வரைபட நிபுணர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்….

The post டிரோன் கேமரா மூலம் நிலத்தை அளந்து சான்றிதழ் வழங்கும் பணி-கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tirukanur ,Puducherry Government Land Survey and Registration Department ,Manalipat ,Thirukanur ,
× RELATED ஐடி ஊழியர் வீட்டை உடைத்து ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை