×

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபர் போக்சோவில் கைது செல்பி எடுத்ததை காட்டி மிரட்டி

 

திருவண்ணாமலை, மே 27: திருவண்ணாமலையில் செல்பி எடுத்ததை காட்டி மிரட்டி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவண்ணாமலை பே கோபுரம் 10வது தெருவை சேர்ந்தவர் பன்னீர் மகன் தீனா என்ற வெற்றிவேல்(24). இவர், திருவண்ணாமலை பகுதியில் அவரது நண்பர் வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது, நண்பரின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த லேப் டெக்னீசியன் படிக்கும் 17 வயது சிறுமியிடம் நட்பாக பழகியுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இயல்பாக இருவரும் சேர்ந்து செல்போனில் எடுத்துக் கொண்ட செல்பி போட்டோவை, சிறுமியின் தாயிடம் காட்டி விடுவதாக வெற்றிவேல் மிரட்டியுள்ளார்.

மேலும், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்ததால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மகளிர் போலீசில் சிறுமியின் தாய் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, வாலிபர் தீனா என்ற வெற்றிவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபர் போக்சோவில் கைது செல்பி எடுத்ததை காட்டி மிரட்டி appeared first on Dinakaran.

Tags : Pocso ,Thiruvannamalai ,Thiruvannamalai Bay Gopuram 10th Street ,Panneer ,Dina ,Vetrivel ,
× RELATED கடலூர் அருகே சிறுமியை பாலியல்...