×

குழாய் சேதம் அடைந்ததால் வீணாகும் காவிரி குடிநீர்

 

மண்டபம்,மே 27: மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்டது தோணித்துறை பகுதியாகும். இந்த பகுதி அருகே ராமேஸ்வரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அருகே ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் இந்த பகுதியில் சேதம் அடைந்து விட்டது. இதனால் கடந்த நான்கு நாட்களாக பல லட்சம் லிட்டர் மதிப்பிலான குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது.

மேலும் இந்த குடிநீர் பைப் அமைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் கருவேல மரங்கள் அதிகமாக படர்ந்து இருப்பதால், தண்ணீர் வெளியேறுவது தெரியவில்லை. இதனால் துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக சேதம் அடைந்த காவிரி குடிநீர் குழாயை சீரமைத்து குடிநீர் வீணாகுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குழாய் சேதம் அடைந்ததால் வீணாகும் காவிரி குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Mandapam ,Thonithura ,Corporation ,Rameswaram island ,Rameswaram-Ramanathapuram National Highway ,Dinakaran ,
× RELATED காவிரி விவகாரம் தொடர்பாக நாளை...