×

20 கிராம மக்கள் பங்கேற்பு புனல்குளம் ஊராட்சியில் பழுதான மின்வாரிய ஊழியர் குடியிருப்பு

 

கந்தர்வகோட்டை, மே27: புனல்குளம் ஊராட்சியில் பழுதான மின்வாரிய ஊழியர் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள புனல்குளம் ஊராட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 110 /11 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளது. இங்கு இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த அலுவலகத்தில் மின்செயற்பொறியாளர்,உதவி மின் செயற்பொறியாளர், மின்கணக்கர், வயர்மேன், பண வசூல் செய்பவர் என பல்வேறு பணிகளில் பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் நகர்ப்புறங்களில் இருந்து தினசரி வந்து செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் துணை மின் நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த நிலையில் இருக்கும் குடியிருப்புகளை சரி செய்து பணியாளர்கள் குடியிருக்கும் வகையில் சரி செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்சாரவாரிய துறை பணியாளர் தங்கி இருந்தால் மின்நிலையத்தில் ஏற்படும் பிரச்னைகளை உடனே சரி செய்ய சுலபமாக இருக்கும் என மக்கள் தெரிவித்தனர்.

The post 20 கிராம மக்கள் பங்கேற்பு புனல்குளம் ஊராட்சியில் பழுதான மின்வாரிய ஊழியர் குடியிருப்பு appeared first on Dinakaran.

Tags : Punalkulam panchayat ,Kandarvakottai ,Tamilnadu Electricity Board ,Pudukottai ,
× RELATED கந்தர்வகோட்டை பகுதியில் இயற்கை தொழு உரமிடும் விவசாயிகள்