×

கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது

 

நாமக்கல், மே 27: நாமக்கல் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(45), சோடா கம்பெனி நடத்தி வருகிறார். இவரது நண்பர் புஷ்பராஜ். நேற்று முன்தினம், இருவரும் எம்ஜிஆர் நகர் செல்லும் சாலை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி, வெங்கடேஷிடமிருந்து ₹1,000 பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், பணத்தை வழிப்பறி செய்தது குட்டைமேலத் தெருவை சேர்ந்த சக்திவேல்(24), பாவடி தெரு பிரசாத்(31) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kathimuna ,Namakkal ,Venkatesh ,Vandikara Street, Namakkal ,Pushparaj ,MGR Nagar ,
× RELATED இலவச தையல் இயந்திரம் பெற பதிவு செய்ய அழைப்பு