×

மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சமீபத்திய மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு போன்ற மானாவாரி பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

கர்நாடகா அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கிறது. நமக்கு உரிய தண்ணீர் விரைவாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,Meghadatu Dam ,Kumbakonam ,Tamil State Congress Party ,President ,Babanasam, Thanjavur district ,Tamil Nadu government ,Karnataka Govt ,
× RELATED மாநிலம் முழுவதும் சாலையை சரிசெய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்