×

100 யூனிட் விலையில்லா மின்சாரம் வாடகைதாரர்களுக்கும் கிடைத்திட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: 100 யூனிட் விலையில்லா மின்சாரம், அனைத்து மக்களுக்கும் கிடைத்திட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: வீட்டு உரிமையாளர்கள் தங்களிடம் இருக்கும் ஒரே மின் இணைப்பு மூலம், வாடகைதாரர்களுக்கும் மின் வசதி வழங்கி வாடகைதாரர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு அதிக மின் கட்டணம் வசூலிக்கும் வாய்ப்புகள் உருவாகும்.

வீடு வாடகைக்கு வருபவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களே ஆவர். எனவே, அவர்கள் மின்சாரத்திற்காக கூடுதலாக செலவு செய்கின்ற நிலை ஏற்படும். முன்பெல்லாம் மின் கட்டணம் செலுத்துவதற்கு 20 நாட்கள் கால அவகாசம் உள்ள நிலையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், மின் துறை ஊழியர்கள் – ஹெல்ப்பர், லைன்மேன் மற்றும் போர்மேன் போன்றவர்கள் நேரில் சென்று மின் கட்டணம் கட்டாதவர்களிடம், உடனடியாக மின் கட்டணம் செலுத்தாவிட்டால் உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி மின் கட்டணத்தை செலுத்த வைப்பார்கள்.

மின் கட்டண இணைப்பு துண்டிக்கப்பட்டால் டிஸ்கனெக்ட் சார்ச் மற்றும் ரி-கனெக்ட் சார்ச் என்று ரூ. 60 வசூலிப்பார்கள். ஆனால் தற்போது அதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது. இதனால், மக்கள் அன்றாடம் இருளில் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே மின் இணைப்பு துண்டிப்பை சம்மந்தப்ட்ட மின் நுகர்வோர்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே தெரிவித்து, அவர்கள் மின் கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வாடகைதாரர்களுக்கும் கிடைத்திட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,General Secretary ,
× RELATED தொடர் தோல்விகளால் அதிருப்தி எடப்பாடி...