×

தமிழ்நாட்டில் போலி பல்கலைகள் எதுவும் கிடையாது: யுஜிசி தகவல்

சென்னை: ஒவ்வொரு மே மாதத்திலும், உயர்கல்வி நிறுவனங்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் முன், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை எச்சரிப்பதற்காக, போலி பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் விவரங்களை பல்கலைக்கழக மானிய குழு(யுஜிசி) வெளியிடுகிறது. அதன்படி, நாடு முழுவதும் செயல்படும் 21 போலி பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் 8 நிறுவனங்களையும், உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திராவில் 4 நிறுவனங்களையும் பட்டியலிட்டுள்ளது. கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2 போலி பல்கலைக் கழகங்கள் உள்ளதாகவும், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு போலி பல்கலைக்கழகம் இருப்பதாக யுஜிசி தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி உயர்கல்வி அகாடமி, போலி பல்கலைக் கழகங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில சட்டம், மத்திய சட்டம் அல்லது மாகாண சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களால் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும் என்பதையும் யுஜிசி தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு சில இடங்களில் யுஜிசி சட்டத்திற்கு மாறாக, பல நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவது தெரிய வந்துள்ளது. இந்த பட்டங்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்படாது அல்லது செல்லுபடியாகாது என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு யுஜிசி இணையதளத்தைப் பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் போலி பல்கலைகள் எதுவும் கிடையாது: யுஜிசி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,UGC Information ,Chennai ,University Grants Committee ,UGC ,Dinakaran ,
× RELATED வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை...