×

கந்தர்வகோட்டை பகுதிகளில் தீயணைப்புதுறை சார்பில் தீ தடுப்பு போலி ஒத்திகை

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் தீயணைப்புதுறை சார்பில் தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுநகர் ஊராட்சி மற்றும் ஆதனக்கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலம் நிலைய அலுவலர் சிவக்குமார் (பொ) மற்றும் அறிவழகன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களிலும் தீ விபத்து நேரங்களிலும் தங்களது உடைமைகளையும், தங்களையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என போலி ஒத்திகை செய்து கண்பித்தனர். நிகழ்ச்சியில் புதுநகர் தலைமை மருத்துவர் மணிமாறன், ஆதனக்கோட்டை தலைமை மருத்துவர் பொன் சரவணன், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், வெளி நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

 

The post கந்தர்வகோட்டை பகுதிகளில் தீயணைப்புதுறை சார்பில் தீ தடுப்பு போலி ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Kandarvakota ,Fire Department ,Pudukkottai District ,Pudukkottai District Kandarvakota Union Fire and Rescue ,Tamil Nadu Government ,Pudukkottai Uradachi ,Adhanakota Uratchi ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டை- தஞ்சை சாலையில் உள்ள...