×

கறம்பக்குடி அருகே கோடைகால பயிர் சாகுபடி விழிப்புணர்வு

கறம்பக்குடி, மே 26: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வேளாண் வட்டாரத்தில் மருதன்கோன் விடுதி கிராமத்தில் வேளாண் துறை சார்பாக குடுமியான் மலை அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பாக கோடை கால பயிர் சாகுபடி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாமில் கறம்பக்குடி வட்டார வேளாண் அலுவலர் ஜெயவேலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு பயிற்சி முகாமில் கறம்பக்குடி துணை வேளாண் அலுவலர் பால்சாமி கலந்து கொண்டு கோடை காலத்தில் எந்தந்த பயிர்கள் எவ்வாறு சாகுபடி செய்ய வேண்டும் என்ற முறையை திட்டத்தை விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். மேலும் இந்த கோடை கால பயிர் சாகுபடி சிறப்பு பயிற்சி முகாமில் குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி மாணவிகளான நிகிதா, நிகானா, பூவிலி, சீதா, ரம்யா , ஷெரின், சவுதா மணி, நவீனா,பூர்ண கலா ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர். இந்த பயிற்சி முகாமில் மருதன்கோன் விடுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கறம்பக்குடி அருகே கோடைகால பயிர் சாகுபடி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Kudumian Hill Government Agricultural College ,Marutankon Inn ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் சாதனை கறம்பக்குடி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு