×

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தர் குரு பூஜை விழா

பெரம்பலூர்,மே26: பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தர் குரு பூஜை விழா நடைபெற்றது.பெரம்பலூர் நகராட்சி, துறையூர் சாலையிலுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நாயன் மார்கள் மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் திருஞான சம்பந்தர் குருபூஜை விழா நேற்று காலை 11:30 மணியளவில் நடை பெற்றது. இதில் 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்மந்தருக்கு பால்,தயிர், சந்தனம்,வாசனை திரவியங்கள் உடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பகல் 1மணி அளவில் மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கோயில் செயல் அலுவலர் கோவிந்தராஜன் மற்றும்பெரம்பலூர் தர்ம பரிபாலன சங்கத்தினர் பூஜைகளுக்கான ஏற்பாடு களைச் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ராஜமாணிக் கம், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், மணி, வார வழிபாட்டு குழுவினர் மற்றும் திரளான சிவனடி யார்கள் மற்றும் பெரம்ப லூர், அரணாரை துறை மங்கலம், எளம்பலூர்,விளா முத்தூர், நொச்சியம் நெடு வாசல் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

The post பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தர் குரு பூஜை விழா appeared first on Dinakaran.

Tags : Trinjana Sambandar Guru Pooja Ceremony ,Perambalur Brahmapureeswarar Temple ,Perambalur ,Thirunna Sambandar Guru Puja ceremony ,Perambalur Brahmapureswarar Temple ,Tirunna Sambandhar Guru Puja ceremony ,Nayan Maral Mandapam ,Akilandeswari Sametha Brahmapureswarar Temple ,Perambalur Municipality ,
× RELATED ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு...