×

ஊட்டி ரோஜா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அனைத்து மலர் அலங்காரங்களும் அகற்றம்

 

ஊட்டி,மே26:ஊட்டி ரோஜா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அனைத்து மலர் அலங்காரங்களும் அகற்றப்பட்டன. ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இம்முறையும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால், இம்மாதம் 7ம் தேதி முதல் ஊட்டி வருவதற்கு இ பாஸ் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்ட நிலையில்,வழக்கத்தை காட்டிலும் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தது.

எனினும், நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கடந்த 10ம் தேதி ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சியில், 80 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு புறா,வன விலங்குகளை காக்க வேண்டும் என வலியுறுத்தி யானைகள்,புலி, வரையாடு, காட்டுமாடு மற்றும் பல்வேறு விலங்குகளின் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இதனை பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ரோஜா கண்காட்சி கடந்த 19ம் தேதி முடிந்த நிலையில், மேலும் மூன்று நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது.இதனால், மலர் அலங்காரங்கள் அகற்றப்படாமல் வைக்கப்பட்டிருந்தது. இதனை பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். இந்நிலையில், தொடர் மழை காரணமாக பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அனைத்து மலர் அலங்காரங்களில் வைக்கப்பட்டிருந்த ரோஜா மலர்கள் அழுகி உதிரத் துவங்கின.

இதனால், அலங்காரங்கள் அலங்கோலமாக காட்சியளித்தன. இதனை தொடர்ந்து, ரோஜா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அனைத்து மலர் அலங்காரங்களையும் தோட்டக்கலைத்துறையினர் அகற்றிவிட்டனர். தற்போது பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்தளவே உள்ள ரோஜாக்களை மட்டுமே கண்டு ரசித்து செல்கின்றனர்.

The post ஊட்டி ரோஜா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அனைத்து மலர் அலங்காரங்களும் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Ooty Rose Park ,Ooty ,Dinakaran ,
× RELATED கைகாட்டி பகுதியில் குரங்குகள் தொல்லை