×

அரசு பொது நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம்

 

திருவள்ளூர் மே 26: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் அனைத்து அரசு துறைகளின் பொது நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான மாவட்ட அளவிலான குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பெறப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் முன்னேற்றம் குறித்தும், 14 ஊராட்சி ஒன்றியங்களில் 1 ஊராட்சி என்ற அடிப்படையில் 14 ஊராட்சிகள் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அந்தந்த பேரூராட்சிகளில் அரசு பொது நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிடவும், நெடுஞ்சாலை உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும், வனத்துறை மூலம் சீமை கருவேல மரங்களுக்கான மதிப்பீடுகள் தயாரித்து உள்ளாட்சி பிரதிநிதி மூலம் டெண்டர் விடப்பட்டு அகற்றுப்பணியை தொடங்குவது குறித்தும் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாவட்ட வன அலுவலர் சுப்பையா, வேளாண்மை இணை இயக்குனர் கா.முருகன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் பரணி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார், தனித்துணை கலெக்டர் (நிலம்) செல்வராணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு பொது நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Vela ,Thiruvallur ,Thiruvallur Collector's Office ,Collector ,T. Prabhu Shankar ,Simai ,
× RELATED கடம்பத்தூர் அருகே வெண்மனம்புதூரில் ரயில்வே ஊழியருக்கு அரிவாள் வெட்டு!