×

வாக்குவங்கி அரசியலுக்காக அழகிகள் போல் ஆட்டம்: இந்தியா கூட்டணி குறித்து மோடி சர்ச்சை பேச்சு

பிக்ராம்: வாக்கு வங்கியை மகிழ்விப்பதற்காக இந்தியா கூட்டணி அழகிகள் போல் நடனம்(முஜ்ரா) ஆடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பிரதமரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் வலுத்துள்ளது.  பீகார் மாநிலம், பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, சமூக நீதிக்கான போராட்டத்தில் புதிய வழிகாட்டுதல்களை வழங்கிய பூமி பீகார்.

எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் உரிமைகளை பறித்து இஸ்லாமியர்களுக்கு திசை திருப்பும் இந்தியா கூட்டணியின் திட்டங்களை நான் முறியடிப்பேன் என்பதை அதன் மண்ணில் அறிவிப்பதற்கு விரும்புகிறேன். அவர்கள் அடிமைகளாக இருந்து கொண்டு தங்களது வாக்கு வங்கியை திருப்தி படுத்துவதற்காக அழகிகள் போல் நடனம்(முஜ்ரா) ஆடுகிறார்கள். உலக அரங்கில் நாட்டின் வலிமைக்கு நீதி வழங்கக்கூடிய பிரதமர் தான் இந்தியாவிற்கு தேவை. ஆனால் இந்தியா கூட்டணியானது பிரதமர் பதவியுடன் மியூசிகல் சேர் விளையாடுவதை நோக்கமாக கொண்டுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி, என்சிபி, சமாஜ்வாதி மற்றும் பிற குடும்பங்களின் வாரிசுகள், பிரதமராக குறுகிய கால பதவிக்காக ஆர்வமாக இருக்கின்றனர்” என்றார்.

எந்த பிரதமரும் பயன்படுத்தாத வார்த்தை: பிரதமரின் முஜ்ரா வார்த்தைக்கு எதிர்கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, பீகாரில் பிரதமர் பேசியதை கேட்டீர்களா? நாட்டின் வரலாற்றில் எந்த பிரதமரும் பயன்படுத்தாத இது போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக்கிறார். முழு நாடும் பிரதமர் பதவியை மதிக்கிறது. பதவியின் கண்ணியத்தைக் காப்பாற்றுவது அவரது பொறுப்பு. இதுபோன்ற வார்த்தைகள் அவரது வாயில் இருந்து வரக்கூடாது’ என்றார்.

வெயிலில் செல்வதால் மனது பாதிப்பு: காங்கிரஸ் ஊடகம், விளம்பரத்துறை தலைவர் பவன் கெரா தனது எக்ஸ் பதிவில், பிரதமரின் வாயில் இருந்து முஜ்ரா என்ற வார்த்தையை கேட்டேன். மோடி ஜீ இது என்ன மனநிலை? வெயிலில் பிரசாரம் செய்வது மனதை அதிகம் பாதித்து இருக்கலாம். இதற்காக நீங்கள் எதாவது மருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வாக்குவங்கி அரசியலுக்காக அழகிகள் போல் ஆட்டம்: இந்தியா கூட்டணி குறித்து மோடி சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,India ,BJP ,Pataliputra Lok Sabha ,Bihar ,India alliance ,Dinakaran ,
× RELATED மக்களவையில் துணை சபாநாயகர் பதவி...